தர்மபுரி: கிணறு தோண்டும்போது வெடி விபத்து - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே கிணறு வெட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர்உயிரிழந்தனர்.
தர்மபுரி அருகே பள்ளக் கொல்லையைச் சேர்ந்த சின்னச்சாமி (40) மற்றும் ஜம்பேரி (22) ஆகிய இருவரும் கிணறுதோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கம்ப்ரசர் மூலம் துளை போட்டு வெடிவைத்து பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்ப்ரசர்டிரைவர் கவனக் குறைவாக வண்டியை எடுத்து விட்டார்.
இதனால் கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடி தவறுதலாக வெடித்துச் சிதறியது. இதில் கிணற்றுக்குள்ளிருந்தசின்னச்சாமியும் ஜம்பேரியும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தர்மபுரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications