கோட்டையில் தற்கொலை செய்த தம்பதியின் மகளுக்கு அரசு வேலை
சென்னை:
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியின்மகளுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் அரசு வேலைக்கான உத்தரவையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
கடந்த மார்ச் 27ம் தேதி மனு கொடுப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வேலு-நளினி தம்பதியர் வந்தனர்.
ஆனால் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடியாத காரணத்தால் அவர்கள் இருவரும் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தஜெயலலிதா, அந்தத் தம்பதியின் மகளான உமாவுக்கு அரசு வேலையும் உதவித் தொகையும் தரப்படும் என்றுஅறிவித்தார்.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவியர் விடுதியில்உமாவுக்கு சமையலராகப் பணி அளிக்க உத்தரவிட்டார்.
மேலும் தமிழக மின் சக்தி நிதி நிறுவனத்தில் உமாவுக்காக ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்துகிடைக்கும் வட்டித் தொகையை அவர் மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யும்படியும் ஜெயலலிதாஉத்தரவிட்டார்.
இவற்றின்படி பணி நியமன உத்தரவையும் ரூ.1 லட்சம் வைப்பு நிதிக்கான சான்றிதழையும் நேற்று(வியாழக்கிழமை) உமாவிடம் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications