டான்சி வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிதிமுக மேலும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
டான்சி வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அவர்ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த 22ம் தேதி டான்சி வழக்கு குறித்து விளக்கமளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை பாரதி தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா எப்படி முதல்வராகப்பதவியில் நீடிக்கலாம் என்று அம்மனுவில் கோரியுள்ள பாரதி, டான்சி வழக்கை விரைவில் விசாரிக்குமாறும்கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரதியின் இந்தப் புதிய மனு மீதான விசாரணை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications