கோட்டையில் வெடிகுண்டு?- புரளி கிளப்பியவர் கைது
சென்னை:
வேலை கிடைக்காத ஆத்திரத்தில் சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு போன் செய்து வெடிகுண்டுவைத்திருப்பதாக புரளி கிளப்பிய ராஜபாளையம் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு நேற்று (சனிக்கிழமை) காலை தொலைபேசி அழைப்பு ஒன்றுவந்தது.
அதில் பேசிய நபர், தனது பெயர் இமாம் அலி என்றும் கோட்டையில் (தலைமைச் செயலகத்தில்) குண்டுவைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் பறந்தது. இணை ஆணையர் சைலேந்திரபாபு தலைமையில் போலீஸார்விரைந்து வந்தனர். கோட்டையில் உள்ள அனைத்து வாசல்களும் மூடப்பட்டன. உள்ளே இருந்தவர்கள்வெளியேற்றப்பட்டனர்.
கோட்டை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கிடைக்கவில்லை.இறுதியில் அந்த குண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தொலைபேசி கட்டுப்பாட்டு அறையில் உள்ள கருவியில்வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண் பதிவாகியிருந்தது. இதை வைத்து கோட்டைக்கு அருகே உள்ளபகுதியில் இருந்துதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கிருந்த ஒரு பூத்தில் விசாரித்தனர். போன் செய்தவரின்அடையாளம் அங்கு கிடைத்தது. இதை வைத்து ரிசர்வ் வங்கி பகுதியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டார்.
அவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பாபு என்றும், பட்டப்படிப்பு படித்துள்ள அவர் வேலை கிடைக்காத ஆத்திரத்தில்வெடிகுண்டு புரளியைக் கிளப்பியுள்ளார் என்றும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications