ஆண்டிப்பட்டியில் ஜெ.
ஆண்டிப்பட்டி:
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று (திங்கள்கிழமை) ஆண்டிப்பட்டிக்குச்சென்ற ஜெயலலிதா, அங்கு ரூ.140 கோடி மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கிளம்பிய ஜெயலலிதா, இன்று காலை 10.15 மணிக்கு மதுரை வந்தார்.மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து உடனடியாக அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா தேனி சென்றார். அங்குஅதிமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களும் அவரை வரவேற்றனர்.
அதன் பிறகு அங்கிருந்து கார் மூலம் ஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதா சென்றார். ரூ.98 கோடி செலவிலானஆண்டிப்பட்டி-சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.
பின்னர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்து வைத்த ஜெயலலிதா, நில ஆவணங்களைக் கம்ப்யூட்டர்மயமாக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி மக்களை நேரில் சந்தித்த ஜெயலலிதா, நலிந்த பிரிவினருக்கு அரசின் நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து விமானம் மூலம் இன்று மாலைசென்னை சென்று சேர்ந்தார்.
முன்னதாக ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஆண்டிப்பட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications