நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனியார் மயமாக்கல் மற்றும் ஊழியர் குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள்நாளை (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
ரிசர்வ் வங்கி, 27 பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள் மற்றும் சில வெளிநாட்டு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம்வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.
அதிக அளவில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைஅதிகரிக்க வேண்டும் என்றும் கோரி வங்கி ஊழியர்கள் நாளைய வேலைநிறுத்தத்தின்போது வலியுறுத்துவர்.
இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தால் ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என்று அனைத்து வங்கி ஊழியர் சங்கத்தின்ஒருங்கிணைப்பாளரான வி.கே. குப்தா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications