"என் மீது வழக்குப் போட மக்கள் வரிப் பணத்தை செலவழித்த கருணாநிதி": ஜெ. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் என் மீது பொய்யான வழக்குகளைப் போடுவதற்காக மக்களின் ரூ.57 கோடிவரிப் பணத்தை அதன் தலைவர் கருணாநிதி செலவு செய்தார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(திங்கள்கிழமை) குற்றம் சாட்டினார்.

தன்னுடைய தொகுதியான ஆண்டிப்பட்டியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்துவிட்டு சென்னைதிரும்பிய ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

""இல்லாத பூனையைக் கண்ணிழந்தவன் இருட்டறையில் தேடுவதைப்"" போல என் மீது சுமத்துவதற்காகவழக்குகளைத் தேடித் தேடியே கடந்த 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகளையும் திமுகவினர் வீணடித்தனர்.

ஆனாலும் படிப்படியாக அனைத்து வழக்குகளிலுமிருந்து நான் விடுபட்டுக் கொண்டே இருக்கிறேன்.

இந்தப் பொய் வழக்குகளுக்கான பொய் சாட்சியங்களைத் தேடுவது உள்ளிட்ட அனைத்து சட்டரீதியானசெலவுகளுக்காகவும் ரூ.57 கோடி வரை மக்களின் வரிப் பணத்தை கருணாநிதி சுரண்டியுள்ளார்.

திமுகவைப் போல மக்களின் வரிப்பணத்தை இப்படி அநியாயமாகவும் அரசியல் எதிரியைத் தீர்த்துக்கட்டுவதற்காகவும் வீணடித்தவர்கள் இந்த நாட்டிலேயே இருக்க முடியாது.

இதனால்தான் மக்கள் தற்போது மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதாஅவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+