குஜராத் முதல்வராக மோடியே நீடிப்பார்: தே.ஜ. கூட்டணி முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தெலுங்கு தேசம் கட்சியின் பலத்த எதிர்ப்புக்கிடையிலும் குஜராத் முதல்வராக நரேந்திர மோடியே தொடர்ந்துநீடிப்பார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மோடியை நீக்காவிட்டால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தாங்கள் கொடுத்த வந்த ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

மத்திய அரசுக்கு ஏற்பட்ட திடீர்ச் சிக்கலையடுத்து, தே.ஜ. கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்என்று திமுக உள்பட பல கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து நேற்று மாலை வாஜ்பாய் இல்லத்தில் தே.ஜ. கூட்டணி அவசரமாகக் கூடியது.

குஜராத் சட்டசபையில் மோடிக்கு மெஜாரிட்டி இருப்பதால், அவரை நீக்குவது பற்றி அந்தக் கட்சிதான் முடிவு செய்யவேண்டும். மற்ற கட்சிகள் இதில் தலையிடக் கூடாது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டாம் என்றும் கூட்டணிக் கட்சிகள் கேட்டுக்கொண்டன.

கலவரம் பாதித்த குஜராத்தில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதே இப்போதைய உடனடி தேவைஎன்றும் கூட்டணிக் கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ஆதரவளித்து வந்த தெலுங்கு தேசம், இனியும் தொடர்ந்துஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்டன.

இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+