குஜராத்தில் மீண்டும் மதக் கலவரம் வெடித்தது
அகமதாபாத்:
குஜராத்தில் முதல்வரை மாற்ற மாட்டோம், வேண்டுமானால் தேர்தலை நடத்துவோம் என்று பாரதீய ஜனதாதலைவர்களும் பிரதமரும் பேசிக் கொண்டிருக்க அங்கே வன்முறைத் தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
நேற்று இரவு அகமதாபாத் நகரில் வெஜால்பூர் காவல் நிலையப் பகுதியில் சிறுபான்மையினர் வசித்து வரும்பகுதியில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. இதனால் வீடுகளில் இருந்த அனைவரும்வீடுகளைவிட்டு தெருக்களில் ஓடினர்.
ஆனால், அவர்களை தெருக்களிலும் அக் கும்பல் விரட்டி விரட்டி அடித்தது. அவர்கள் விட்டுச் சென்ற வீடுகளில்நுழைந்து அங்கிருந்த பொருள்களை அள்ளிக் கொண்டு ஓடியது.
விரட்டியடிக்கப்பட்டவர்களில் சிலர் திருப்பித் தாக்கினர். இதனால் அங்கு பெரும் கலவரம் மூண்டது.
கலவரம உச்சகட்டத்தை அடைந்த பின்னரே போலீசார் அங்கு வந்தனர். இத்தனைக்கும் அங்கு ஊரடங்கு அமலில்உள்ளது என்பது குறிப்பிட்டத்தது. போலீசார் நகரெங்கும் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருவதாகவும், எல்லாஇடங்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதாகவும் அம் மாநில முதல்வர் நரேந்திர மோடி அனைவரையும் ஏமாற்றிவருகிறார். அவருக்கு பா.ஜ.க. முழு ஆதரவளித்து வருகிறது.
லேட்டாக வந்து சேர்ந்த போலீசார் கலவரக்காரர்களை அடக்க முடியாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்ஒருவர் இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து கலைந்து ஒடிய அந்த வன்முறைக் கும்பல் அந்த வழியே சென்ற ரயில் மீது கல் எறிந்தது. இதில்ரயிலில் பயணம் செய்த பலரின் மண்டை உடைந்தது.
சனிக்கிழமை தான் இங்கு 3 பேர் இறந்தனர். நேற்று ஒருவர் பலியாகியுள்ளார்.
இந் அழகில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தத் தயராக இருப்பதாக பா.ஜ.க. பேசி வருகிறது.












Click it and Unblock the Notifications