குஜராத்தில் தொடர்ந்து வன்முறை: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வரை தொடர்ந்த வன்முறையில் நேற்று மட்டும் 5 பேர்பலியாகினர்.

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளை 59 கர சேவகர்களோடு சேர்த்துக் கொளுத்தியசம்பவத்தையடுத்து, குஜராத் முழுவதும் பரவிய வன்முறையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்பலியாகினர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் இந்த வன்முறை இன்னும் நின்ற பாடில்லை. ராணுவம்குவிக்கப்பட்டபோதிலும் அங்கும் இங்குமாக வன்முறை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அகமதாபாத்தின் பல பகுதிகளிலும் தீவைப்பு, கல்லெறிதல் என்று பல வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டகும்பலைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர். நகரின் பல பகுதிகளில் இன்னும்பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. அப்பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை உடனடியாக நீக்க வேண்டும்மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி உட்பட எதிர்க் கட்சிகள் அனைத்தும் போர்க் கொடிஎழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே குஜராத் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து மோடிதலைமையிலான அமைச்சரவை தற்போது கூடி விவாதித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+