பேச்சுக்கு முன்பே தடையை நீக்க புலிகள் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தாய்லாந்தில் விரைவில் நடைபெறவிருக்கும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே தங்கள்மீதான தடை விலக்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
தங்கள் மீதான தடை விலக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று புலிகள் உறுதியாகநம்புகின்றனர்.
மேலும் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள பல நிபந்தனைகளை இலங்கை அரசு இன்னும்நிறைவேற்றாததால், தாய்லாந்து பேச்சுவார்த்தையை மே மாதத்திற்குப் பதிலாக ஜூனில் வைத்துக் கொள்ளலாம்என்றும் புலிகள் கூறியுள்ளனர்.
நார்வே தூதுக் குழுவில் உள்ள எரிக் சோல்ஹைம் உள்ளிட்ட பலர் நேற்று புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரனைச் சந்தித்தனர். அப்போது தங்களுடைய விருப்பங்களையும் புதிய நிபந்தனைகளையும் அவர்களிடம்புலிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications