குஜராத்: தேர்வுகளை புறக்கணித்த முஸ்லீம் மாணவர்கள்
அகமதாபாத்:
குஜராத்தில் 10வது மற்றும் 12வது படிக்கும் சுமார் 90 சதவீத முஸ்லீம் மாணவர்கள் தங்களுடைய இறுதித் தேர்வைப்புறக்கணித்தனர்.
கடந்த ஒன்றரை மாதமாக குஜராத்தில் வன்முறை தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில், அரசுப் பொதுத்தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அந்தத் தேர்வும் வந்து விட்டது.
ஆனால் முஸ்லீம் மாணவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் தேர்வு மையங்களை அமைத்துத் தரும்படிஅரசைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு குஜராத் அரசு மறுத்து விட்டது.
போதிய பாதுகாப்புகள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதலாம்என்று கூறிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்வைத் தடுத்து நிறுத்த முயல்பவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதிலும் உள்ள 205 தேர்வு மையங்களில் வீடியோ காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,வீடுகளிலிருந்து மாணவர்களை தேர்வு மையங்களுக்குக் கொண்டு வருவதற்காக பாதுகாப்புப் படையினருடன்கூடிய பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநிலத்தில் இன்னும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், பாதுகாப்பில்லாதஇடங்களுக்குச் சென்று தங்களால் தேர்வு எழுத முடியாது என்று முஸ்லீம் மாணவர்கள் கூறி, தேர்வுகளையேபுறக்கணித்து விட்டனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 14,000 முஸ்லீம் மாணவர்கள் இன்று தேர்வு எழுதவிருந்தனர். ஆனால் 90 சதவீதமாணவர்கள் தங்களுடைய தேர்வுகளைப் புறக்கணித்து விட்டனர். "அகமதாபாத் கலவரத்தால்பாதிக்கப்பட்டவர்கள்" நேற்றிரவு கூடி இம்முடிவை எடுத்தனர்.
தங்களுடைய எதிர்காலத்தையே நிர்ணயிக்கக் கூடிய இந்தத் தேர்வுகளை எழுத முடியாததால், இம்மாணவர்கள்பெரிதும் அதிருப்தியுடன் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications