திமுகவின் கேலிக்கூத்து: வாருகிறார் சிதம்பரம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வரக் கோரி தமிழகசட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல் நடுநிலை வகித்த திமுகவின் செயல்கேலிக்கூத்தானது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளரான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கோவா மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் பேசும்போது, முஸ்லீம்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை கொள்கையைக் கொண்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இதை எண்ணிப் பார்க்கவேண்டும். பாஜகவுக்கு ஆதரவு தருவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதாக் கட்சி மதவாதக் கட்சி. அந்தக் கட்சிக்கு எந்தக் கட்சியும் ஆதரவு தரக் கூடாது. பாஜகவுக்கு ஆதரவுதரும் கட்சியும் கூட மதவாதக் கட்சியாகத்தான் இருக்க முடியும்.
பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தாங்கள் நடுநலை வகிப்பதாக திமுக அறிவித்தது. இது மிகவும் கேலிக்கூத்தான செயலாகும்.
நடுநலை என்ற ஒரு நிலையே உண்மையில் கிடையாது. அதை ஒரு நிலைப்பாடு என்றே கூட எடுத்துக் கொள்ளமுடியாது. எனவே மக்களைக் குழப்பும் விதமாகவே திமுக நடந்து கொண்டுள்ளது.
சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரபாகரனை நாம் நாடு கடத்தமுடியாதுதான். ஆனால் அதற்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நமது உணர்வுகளை மாற்றிக் கொள்ள முடியாதுஅல்லவா என்றார் சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications