சோனியாவை உளவு பார்க்கவில்லை என்கிறது தமிழக அரசு
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியாவை தமிழக போலீசார் உளவு பார்க்கவில்லை என்று அரசு மறுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் சோனியா காந்தியை மத்திய வர்த்தகத் துறை அமைச்சரும் திமுக தலைவர்களில்ஒருவருமான முரசொலி மாறன் ரகசியமாய் சந்தித்துப் பேசினார்.
இந்தத் தகவலை திமுகவும் மறைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியும் மறைத்தது.
ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து டெல்லியில் உள்ள தமிழக உளவு போலீசார் உடனடியாக தமிழக முதல்வர்ஜெயலலிதாவுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்தச் சந்திப்பை ஜெயலலிதா சட்டசபையிலேயே பகிரங்கமாக்கினார். இது குறித்து திமுக உறுப்பினர்துரைமுருகன் சந்தேகம் எழுப்பியபோது, என்னிடம் உளவுத்துறை இருக்கிறது என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
இதையடுத்து தமிழக உளவுத்துறை போலீசார் சோனியா காந்தியை உளவு பார்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதை இத்தனை நாட்களாக மறுக்காத தமிழக அரசு இப்போது திடீரென மறுத்துள்ளது. இது குறித்து முன்னாள்முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் கூறுகையில்,
உளவுப் பிரிவு போலீசார் டெல்லி உள்பட அனைத்து இடங்களிலும் ரகசிய தகவல்களைச் சேகரித்து அரசுக்குஅனுப்பி வருகின்றனர். அவர்கள் சோனியாவை உளவு பார்க்கவில்லை. இது தொடர்பாக இளங்கோவன் கூறிவரும் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை என்றார்.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் இணைய முயற்சிகள் எடுக்கும் அதே நேரத்தில் அவர்களின் ஆட்சி எப்போதுவேண்டுமானாலும் கவிழலாம் என்றும் ஜெயலலிதா கருதுகிறார். அடுத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும்வாய்ப்புள்ளதால் அக் கட்சியையும் முழுமையாகப் பகைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை.
அதே போல காங்கிரசுடன் திமுக நெருங்குவதைத் தடுக்கவும் ஜெயலலிதா முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
அதனால் தான் காங்கிரசுக்கு ஆதரவாக குஜராத் முதல்வர் மோடியை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா குரல்கொடுத்தார்.
இதனால் தான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது சோனியாவை உளவு பார்க்கவில்லைஎன்றும் பன்னீர் மூலம் விளக்கம் தந்திருக்கிறார்.
இதுவரை பா.ஜ.கவை ஆதரிப்பதில் திமுகவுடன் போட்டி போட்ட ஜெயலலிதா இப்போது காங்கிரஸைஆதரிப்பதில் போட்டி போட்டு வருகிறார் என்று சில தினங்களுக்கு முன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் கூறியுள்ளதில் உண்மை இல்லாமல் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications