கடன் தொல்லை: சேலத்தில் தம்பதி தற்கொலை
சேலம்:
சேலத்தில் கடன் தொல்லை காரணமாக விசைத்தறி அதிபர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டி காடு பகுதியைச் சேர்ந்தவர் மாதகிருஷ்ணன்(33). இவரது மனைவிசீதாலட்சுமி(26). திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன இந்தத் தம்பதிக்கு உஷா நந்தினி என்ற 4 வயது மகள்இருக்கிறாள்.
மாதகிருஷ்ணன் சாயப்பட்டறை தொழில் செய்து வந்தார். அதில் அவருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பிறகுவிசைத்தறி தொழிலைச் செய்து வந்தார்.
இந்தத் தொழிலும் மாதகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டவே, அவர் நிறைய கடன் வாங்கஆரம்பித்தார். ஆனால் கடனை அடைக்க முடியாமல் அவர் சமீப காலமாக மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.
சீதாலட்சுமியின் தந்தை சுந்தர்ராஜ் (52) சேலம் குகை பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம்மாதகிருஷ்ணன் தன் குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்களுடைய மகளான உஷாநந்தினியைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு தம்பதியர் இருவரும் வீடு திரும்பினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வெகுநேரமாக மாதகிருஷ்ணன் வீட்டிலிருந்து தண்ணீர் வெளியே வந்துகொண்டிருந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதுகுறித்து உடனடியாகப் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மாதகிருஷ்ணன்-சீதாலட்சுமிஇருவரும் பிணமான நிலையில் இருந்தது தெரிய வந்தது.
விஷம் குடித்த பின் சீதாலட்சுமி பாத்ரூம் சென்றிருக்கிறார். அப்போது திறக்கப்பட்ட குழாய் மூடப்படவில்லை.அதனால்தான் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி உள்ளது.
பின்னர் அவர்களின் உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications