மாமா மருமகனும்... திமுகவினரின் வெளிநடப்பும்..
சென்னை:
தனது மருமகன் மத்திய வர்த்தக அமைச்சராக இருந்தும் கூட நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்தேயிலைக்கு கூடுதல் விலையைப் பெற்றுத் முதல்வராக இருந்த கருணாநிதி தவறிவிட்டார் என்று உணவுத்துறைஅமைச்சர் தனபால் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, சட்டசபையில் கருணாநிதி-மாறன் இடையிலான மாமா-மருமகன் உறவை தேவையில்லாமல்அமைச்சர் குறிப்பிடுவதாகக் கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
உணவு அமைச்சர் தனபால் பேசுகையில்,
திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்கு உரிய விலைகிடைக்காததால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் கூடபலன் ஏற்படவில்லை.
மத்தியில் தனது மருமகனை அமைச்சராக்கிய கருணாநிதி அவர் மூலமாவது மத்திய அரசை வலியுறுத்திதேயிலைக்கு உரிய விலையை வாங்கித் தந்திருக்கலாம் என்றார்.
அப்போது இடைமறித்த திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், திமுக ஆட்சியில் தான்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு கூடுதலாக இரண்டு ரூபாயை வாங்கிக் கொடுத்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் முரசொலி மாறனுக்கும் திமுக தலைவருக்கும் உள்ளமாமா-மருமகன் உறவை அமைச்சர் இழுத்துள்ளார். அவர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றார்.
இதை சபாநாயகர் காளிமுத்து ஏற்கவில்லை. கருணாநிதி அவர்களின் மருமகன் தான் மாறன் என்பதுஎல்லோருக்கும் தெரியுமே என்று கூறிய காளிமுத்து இதில் எந்தப் பகுதியையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லைஎன்றார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்களும்பதில் கோஷம் எழுப்ப அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து அரசைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications