ஊழலுக்காக ஆட்சியை இழந்தது திமுக: அமைச்சரின் பேச்சால் சட்டசபையில் கலாட்டா
சென்னை:
கடந்த காலங்களில் ஊழலுக்காகவே இருமுறை தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்தது என்று வருவாய்த்துறைஅமைச்சர் தளவாய் சுந்தரம் இன்று சட்டசபையில் கூறியதையடுத்து திமுக உறுப்பினர்களுக்கும்அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
சுமார் பத்து நிமிடங்களுக்கு சபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
சட்டசபையில் இன்று பேசிய தளவாய் சுந்தரம், ஊழல் என்ற மிகப் பெரிய "விருதை" மட்டுமே மத்தியஅரசிடமிருந்து திமுக அரசு பெற்றுள்ளது என்று கூறினார்.
தளவாயின் இந்தப் பேச்சைக் கேட்டு ஆளும் அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் மேஜையைத்தட்டிப் பாராட்டினர்.
இதனால் கடுப்பாகிப் போன சட்டசபை திமுகவின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்,தேவையில்லாத-உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகவே பல மாநில அரசுகளை மத்திய அரசு பலமுறைகலைத்துள்ளது என்று பதிலுக்குக் கூறினார்.
ஆனால் தளவாய் சுந்தரம் சளைக்காமல், ""இதை நான் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒருஅறிக்கையில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது"" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்.
இதைக் கடுமையாக ஆட்சேபித்து திமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஸ்டாம்ப் டியூட்டி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு தனியார் டிவி நிறுவனம் தன்னுடையசொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏவான போளூர் வரதன் குற்றம் சாட்டினார்.
இதனால் மீண்டும் கடுப்பான துரைமுருகன், சபாநாயகர் காளிமுத்துவைப் பார்த்து, ""இது தொடர்பாக ஏதாவதுஆவணங்களை உங்களிடம் போளூர் வரதன் காண்பித்தாரா? அவரை எப்படி நீங்கள் இவ்வாறு பேசஅனுமதிக்கலாம்?"" என்று கோபத்துடன் கேட்டார்.
அப்போது மீண்டும் அவையில் ஐந்து நிமிடங்களுக்கு அமளி ஏற்பட்டது. ஆதாரமில்லாத விஷயங்களை அவையில்சமர்ப்பிக்காமல் பேசக்கூடாது என்று போளூர் வரதனை காளிமுத்து கண்டித்த பிறகே துரைமுருகன்அமைதியானார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications