மீண்டும் வாய் தவறி விட்டதா? ஜெவுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம் தி.மு.க ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது. ஆனால், இது அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாக ஜெயலலிதாபேசி வருவது உண்மைக்குப் புறம்பானது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஜெயலலிதா 1995ஆம் ஆண்டு அவருடைய ஆட்சியின் போது பல்கலைக் கழகம்அமைக்கப்பட்டதாக கூறி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறான தகவல். இந்தப் பல்கலைக்கழகத்தை அமைத்து நான் தான்.

இதற்கான விபரங்கள் :

1996 - 97 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த பல்கலைக்கழகத்துக்கான சட்ட முன் வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.

20-09-97ல் பல்கலைக் கழகத்தின் தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் தொடங்கி வைக்க, கவர்னர் பாத்திமா பீவி தலைமை தாங்க, நான் அடிக்கல் நாட்டினேன்.

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? நான் தொடங்கி வைத்தது உண்மை என்றா? அல்லது அப்படி பேசவே இல்லை என்றா? அல்லது வாய் தவறி கூறி விட்டேன் என்றா? என்று அறிக்கையில் கருணாநிதி கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+