மும்பை ரவுடியின் உடல் மனைவியிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை தாதா சஞ்சய் காட்டியாவின் உடலை அவரது மனைவி சங்கீதாவிடம், சென்னை போலீஸார்ஒப்படைத்தனர்.
மும்பை பெரிய தாதா சோட்டா ராஜனின் கூட்டாளியான சஞ்சய் காட்டியா, சென்னை கிண்டி ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில்,போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
சஞ்சய் காட்டியா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அவரது மனைவி சங்கீதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனதுஉறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தார்.
கிண்டி சரக காவல்துறை துணை கமிஷனர் சத்திரபாண்டியை அவர் சந்தித்து தனது கணவரின் உடலை ஒப்படைக்குமாறு கோரினார்.
இதையடுத்து அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சஞ்சயின் உடல் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications