தேனியில் இடியுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி:
தேனியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததையடுத்து, பொதுமக்களும் விவசாயிகளும்மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கோடையின் கடுமை காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் பயங்கரமாகக்கொளுத்தத் தொடங்கியது.
ஆனால் இம்மாதத் துவக்கத்தில் தேனியில் ஆலங்கட்டி மழை பெய்து, அந்நகர மக்களை ஆச்சரியத்திலும்மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் அங்கு இடியுடன் கூடிய மழை பெய்தாலும், அதன் பிறகு மீண்டும் வழக்கம்போல கோடை வெயில் மக்களை வாட்ட ஆரம்பித்தது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.
பயங்கரமான இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததையடுத்து, தேனி நகர மக்களும் அதன் சுற்றுப்புறத்திலுள்ளவிவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல மணி நேரத்திற்குப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications