ஸ்டாலின் பதவிப் பறிப்பு மசோதா: சட்டசபையில் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டாலினின் பதவியைப் பறிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருக்கத் தடை செய்யு சட்டம் கொண்டு வரப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் சட்டசபையில் ஜெயலலிதாவுடன் ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்த திடீர்அறிவிப்பை வெளிட்டார்.

இந் நிலையில் இந்த சட்டத்துக்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் கணடனம் தெரிவித்தன. இது ஸ்டாலினின் மேயர் பதவியைப்பறிப்பதற்காக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாகும் என எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் கூறினர்.

திமுகவுக்கு ஆதரவாக பா.ம.க, த.மா.கா., காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இந்தச் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை சரி தான். ஆனால், இதை உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்போதே அரசுஉணர்ந்து அப்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது கொண்டுவருவது தவறானது.

அதிலும் இச் சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவதை ஏற்கவே முடியாது என்றனர்.

இந்த மசோதா ஸ்டாலின் என்ற தனிப்பட்ட மனிதருக்கு எதிராகக் கொண்டு வரப்படுவதாக திமுக உறுப்பினர்கள்கூறினர். எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் பேசுகையில், இந்தச் சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவதைஏற்க முடியாது என்றார்.

கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைசாமி தாக்கல் செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:

எம்.எல்.ஏ., எம்.பியாக இருப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, முனிசிபாலிடி, பஞ்சாயத்து)தலைவராகவோ துணைத் தலைவராகவே இருப்பதை இந்தச் சட்டம் தடை செய்யும்.

பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்ததையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தச்சட்டத்தைக் கொண்டு வர இந்திய அரசியல் சட்டத்திலேயே வழிவகை உள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம், தமிழ்நாடு நகராட்சிச் சட்டம், சென்னை, மதுரைமாநகராட்சிகளின் சட்டம், கோவை முனிசிபாலிடிச் சட்டம் ஆகியவற்றின் திருத்தம் செய்யப்படும்.

இந்தச் சட்டத்தின் படி எம்.எல்.ஏ., எம்.பியாக இருப்பவர்கள் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்குத்தேர்ந்தெடுக்கப்படுவது தடை செய்யப்படும். இப்போது எம்.எல்.ஏ., எம்.பியாக இருப்பவர்கள் வகித்து வரும்உள்ளாட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றார் துரைராஜ்.

இதன் மூலம் ஸ்டாலின் தனது மேயர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் எம்.எல்.ஏ. பதவியைராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

மேயரின் அதிகாரங்களை துணை மேயர் தியாகராஜனும், ஆணையரும் பறித்து வருகின்றனர். ஸ்டாலின் சொல்லும்எந்த வேலையையும் அதிகாரிகள் கவனிப்பதில்லை. இதனால் அந்தப் பதவியையே ஒரு சுமையாகத் தான் அவர்கருதி வருகிறார்.

இதனால் ஸ்டாலின் தனது மேயர் பதவியை தூக்கி எறிவார் என்று தெரிகிறது. தானாக பதவி விலகாமல் அரசே தன்பதவியை பறிக்கட்டும் என்று ஸ்டாலின் விட்டுவிடுவார் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஸ்டாலினுக்கு மேயர்என்ற வகையில் சென்னை மக்களிடையே நல்ல பெயர் உள்ளது.

அவரது பதவியைப் பறித்தால் அவருக்கு பெருமளவில் அனுதாபம் கிடைக்கும் என திமுக கருதுகிறது.

இந் நிலையில் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+