போலீஸ் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மச் சாவு

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

ஈரோட்டில் நடந்த கொள்ளைகள் தொடர்பாக போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபொற்கொல்லர் ஒருவர் மர்மமான முறையில் அரசு மருத்துவமனை பிணக் கிடங்கில் இறந்து கிடந்தார்.

அவரை போலீசார் தான் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பெரியகுளத்தில் இன்று காலை பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொள்ளைகள் தொடர்பாக பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொள்ளையடித்த நகைகளில் 80 பவுன் நகைகளை முத்துக் கிருஷ்ணன் என்றபொற்கொல்லரிடம் விற்றுள்ளனர்.

இது தொடர்பாக விசாரிக்க முத்துக் கிருஷ்ணனை பெரியகுளம் போலீசார் அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவரது உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் கிடப்பதாக சிலர் வந்து அவரது உறவினர்களிடம்தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு ஓடினர்.

இறந்து கிடப்பது முத்துக்கிருஷ்ணன் தான் என்று தெரிய வந்தவுடன் அவர்கள் அனைவரும் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முத்துக்கிருஷ்ணனை போலீசார் தான் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறிய அவர்கள் அந்த போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினர். தவறு செய்தவர்கள் மீதுநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் பின்னர் தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந் நிலையில் இச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், காவல் நிலையத்தில் விசாரைணக்காக அழைத்துவரப்பட்ட முத்துக்கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்றனர்.

ஆனால், அவர் இறந்த தகவலை போலீசார் அவரது உறவினர்களிடம் கூறாமல் மறைத்தது ஏன் என்றுதெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+