வீரப்பன் கூட்டாளி கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
பவானி:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய வீரப்பனின் கூட்டாளியான ராமு (35) என்பவன்நேற்று (திங்கள்கிழமை) மாலை பவானி நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடந்த 2000ஆம் ஆண்டு ராஜ்குமார் கடத்தப்பட்டு, பின்னர்விடுவிக்கப்பட்டார். இது குறித்து தாளவாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த கடத்தலில் ஈடுபட்டவனும் வீரப்பனின் முக்கியக் கூட்டாளிகளில் ஒருவனுமான ராமுவைப் போலீசார்தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பவானி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ராமு சரணடைந்தான்.
ராமுவை விசாரித்த நீதிபதி, அவனை வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து பவானி சப் ஜெயிலில் ராமு அடைக்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications