"முறைகேடாக" தேர்வான கவுன்சிலர்கள் பதவியேற்பு: திமுக வெளிநடப்பு
சென்னை:
சென்னை மாநராட்சிக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய கவுன்சிலர்களுக்கு நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியைதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணித்து வெளிடப்பு செய்தன.
கடந்த 8ம் தேதி சென்னை மாநகராட்சியின் 16 மற்றும் 99வது வார்டுகளில் இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலின்போது அதிமுகவினர் வழக்கம்போல வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, கள்ள ஓட்டுக்களைப்போட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இதற்கிடையே இந்த இரண்டு வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மாநகராட்சி மன்றம் இன்று கூடியது. உடல்நலக் குறைவு காரணமாக கூட்டத்திற்கு மேயர்ஸ்டாலின் வராததால், துணை மேயரான கராத்தே தியாகராஜன் மேயர் இருக்கையில் அமர்ந்தே கூட்டத்தைத்தலைமை தாங்கி நடத்தினார்.
ஏற்கனவே அறிவித்தபடி, 16 மற்றும் 99வது வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புருஷோத்தமன் மற்றும் சுகுமார்ஆகிய இருவரும் சென்னை மாநகராட்சியின் புதிய கவுன்சிலர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் கராத்தே தியாகராஜன்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் இந்த இரண்டுகவுன்சிலர்களும் முறைகேடாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று கூறி திமுக கவுன்சிலர்கள் இந்தப் பதவியேற்புநிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
இந்த இரண்டு வார்டுகளிலும் ஜனநாயகத்தை மீறி அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதால் இந்தத் தேர்தல்செல்லாது என்பதால்தான் நாங்கள் இதைப் புறக்கணித்தோம் என்று திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தபின்னர் நிருபர்களிடம் கூறினர்.
"இதைத் தவிர மேலும் ஒரு முறைகேட்டுக்காவும் இன்று வெளிநடப்பு செய்தோம். பொதுவாக மேயர்தான்கவுன்சிலர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆனால் இன்றோ துணை மேயரே பதவிப் பிரமாணம்செய்து வைத்தார். அதையும் கண்டித்துதான் வெளிநடப்பு செய்தோம்" என்றும் அவர்கள் கூறினர்.
திமுக கவுன்சிலர்களுடன் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வேறு சில எதிர்க் கட்சி கவுன்சிலர்களும் கூட வெளிநடப்புசெய்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது 99வது வார்டில் போட்டியிட்டதிமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து போனதால்தான் இங்குஇடைத் தேர்தல் நடைபெற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications