தேர்தல் விதிமுறைகளை திட்டமிட்டு மீறி வரும் அரசு
சென்னை:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகளை இட மாற்றம் செய்ததன் மூலம் அதிமுக அரசு தேர்தல்விதிகளை திட்டமிட்டு மீறி வருவதாக எதிர்க் கட்சியினர் சட்டப் பேரவையில் இன்று குற்றம் சாட்டினர்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சுறுப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதியை கமிஷன் அறிவித்த பின்னர் அவசர அவசரமாக சைதாப்பேட்டையில் 12மாநகராட்சி அதிகாரிகளையும் வாணியம்பாடியில் 4 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும் அரசு இடமாற்றம்செய்தது.
இவர்கள் தான் தேர்தல் பணிகளை முன்னின்று நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு தேர்தலில் முறைகேடுகள் செய்வதற்காகத் தான்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் திமுகவுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே கடும் மோதல் நடந்துவருகிறது.
இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் விசாரணையும் நடத்தி வருகிறது. இன்று அந்த விசாரணை அறிக்கைமத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இன்று திமுக உறுப்பினர் புகழேந்தி இது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.அவர் கூறுகையில்,
தேர்தல் தேதியை அறிவித்த பிறகு அதிகாரிகளை மாற்றியது ஜனநாயகத்தையே கொலை செய்ததற்கு சமமானது.இந்த ஜனநாயகப் படுகொலையை கைவிட்டுவிட்டு உடனே அந்த இட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.
சைதாப்பேட்டையில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் பணியாற்றி வந்த 12 மாநகராட்சி அதிகாரிகளுக்குஇடமாற்றல் உத்தரவு போடப்பட்டுள்ளது. முன் தேதியிட்டு அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. அதுவம்அவர்களுக்குத் தெரியாமலலேயே. இதனால் தாங்கள் மாற்றப்பட்டது கூடத் தெரியாமல் அவர்கள் அங்கேயேபணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இப்படி முன் தேதியிட்டு இடமாற்றத்தை அமல்படுத்தியன் மூலம் சட்டத்தின் பிடியில் தப்ப அரசு முயல்கிறது. இதுமுழுக்க முழுக்க அரசியல் காரணங்களினால் போடப்பட்ட உத்தரவு என்றார் புகேழந்தி.
திமுக உறுப்பினரின் இந்தக் கருத்தை த.மா.கா. உறுப்பினர் ஞானசேகரன், பா.ஜ.க. உறுப்பினர் அரசன்ஆகியோரும் ஆதரித்துப் பேசினர்.
தீய எண்ணத்துடன் போடப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவுகளை உடனே வாபஸ் வாங்க வேண்டும் என அவர்கள்வலியுறுத்தினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைசாமி,
இந்த இடமாற்றல்களுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் எதுவும் மறைக்கப்படவில்லை. எல்லாம்வெளிப்படையாகவே நடந்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications