அதிரடிப் படையினரை முடக்கி வைத்தார் கருணாநிதி: ஜெ. புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏதும் இல்லை என்றும் அப்பணி தீவிரமாக நடந்துவருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடந்தது. அப்போது ஒருகேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில் கூறியதாவது:

வீரப்பனைத் தேடும் பணி தொய்வடைந்து விட்டதாகக் கூற முடியாது. தொடர்ந்து தீவிரமாக அப்பணி நடந்துவருகிறது. எனது ஆட்சிக்காலத்தில் இதுவரை 28 முறை சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் அதிரடிப்படையினர்மோதியுள்ளனர்.

ஆனால் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு முறை கூட வீரப்பனுடன் அதிரடிப்படை மோதவில்லை. அந்தஅளவுக்கு அதிரடிப்படை வீரர்களை அப்போதைய திமுக அரசு முடக்கி வைத்திருந்தது.

மேலும் முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழக அதிரடிப்படை வீரர்களுடன் கர்நாடக வீரர்கள் நல்லஒத்துழைப்பு கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள். எனவே வீரப்பன் விரைவில் பிடிபடுவான். வீரப்பனைப்பிடிக்காமல் எனது அரசு ஓயாது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+