நாளை மகாவீர் ஜெயந்தி: கறிக் கடைகளை மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாவீரர் ஜெயந்தியையொட்டி நாளை இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அகிம்சைத் தத்துவத்தைப் போதித்த மகாவீரன் பிறந்த நாளை பிராணி வதை தடுப்பு நாளாக இந்தியா முழுவதிலும்கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மீறித் திறந்தால் அபராதம், தண்டனையும்விதிக்கப்படும்.
இதன்படி வருகிற நாளை மகாவீரர் ஜெயந்தியையொட்டி சென்னை நகரில் இறைச்சிக் கடைகளை மூடஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கடைகளைத்திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications