ரயிலில் இருந்து தள்ளிவிட்டு ராகிங்: கையை இழந்தான் மாணவன்
சென்னை:
ராகிங் என்ற பெயரில் பத்தாம் வகுப்பு மாணவன் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டான். இதில் அவனது ஒரு கைதுண்டானது. காதும் செவிடானது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் ஸ்ரீதர் (15). இவர் தாம்பரத்தில் உள்ளஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
இவரை அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பெரோஸ்கான் அடிக்கடி ராகிங் செய்து வந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ஸ்ரீதர் ரயிலில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பெரோஸ்கானும் மற்றும்சில மாணவர்களும் அதே ரெயிலில் ஏறினர். அவர்களைப் பார்த்து பயந்த ஸ்ரீதர் ரயிலின் கதவருகே வந்து நின்றுகொண்டார்.
அப்போது திடீரென்று பாய்ந்து வந்த பெரோஸ்கான், ஓடும் ரயிலிலிருந்து ஸ்ரீதரைக் கீழே தள்ளினான். மிகவேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்த ஸ்ரீதர் தண்டவாளத்தை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில்பலமாக மோதினார்.
மோதிய வேகத்தில் அவரது இடது கை துண்டாகிவிட்டது. உடனே அவரைச் சுற்றி கூட்டம் கூடியது. அவர்களிடம்தன் வீட்டு தொலைபேசி எண்ணை கூறி விட்டு மயங்கி விட்டார் ஸ்ரீதர்.
உடனே பொது மக்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்த டாக்டர்கள்ஸ்ரீதரின் கையை ஒன்று சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர்.
மேலும் ரயிலில் இருந்து விழுந்ததில் ஸ்ரீதரின் ஒரு காதும் கேட்கும் திறனை இழந்து விட்டது.
ராகிங் செய்த பெரோஸ்கானை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது.
போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் இவன் கைது செய்யப்படுவான் என்றுதெரிகிறது.
ராகிங்கைத் தடுக்க வேண்டிய கடமை அந்தந்த பள்ளி முதல்வர்களுக்கும் கல்லூரி முதல்வர்களுக்கும் உண்டு.ஆனால், அவர்கள் இந்த விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்து வருவது ராகிங் செய்யும் மாணவர்களைஊக்குவிப்பதாக இருந்து வருகிறது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி, கையை இழந்த பின்னர் அதற்குக் காரணமான மாணவனை பள்ளிநிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications