கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கருவேப்பிலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கருவேப்பிலை வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
புளியம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கருவேப்பிலையை வண்டியில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.புதன்கிழமை தலைவாசலுக்குச் சென்று பிராந்தி வாங்கினார்.
அப்போது அவர் கொடுத்த நூறு ரூபாய் நோட்டு குறித்து பிராந்திக் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆனந்தனிடம் விசாரித்தார். அப்போது திடீரென ஆனந்தன் ஓடத் தொடங்கினார். ஆனால் கடைக்காரர் விடாமல்துரத்திப்பிடித்து அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையின்போது ஆனந்தன் கொடுத்தது கள்ள நோட்டு என்று தெரிய வந்தது. அவரிடம் அதுபோன்ற 9 கள்ளநோட்டுக்கள்இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications