4 தொகுதிகளில் மனு செய்த ஜெ.: தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4 தொகுதிகளில்வேட்புமனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவுக்குபதிலளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஜெயலலிதாவேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பியான குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது.
அது தெரிந்திருந்தும் நான்கு தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தேன்.
இப்புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல்கமிஷன் எனக்குப் பதிலளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல்கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று குப்புசாமி அம்மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசிம்மபாபு மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர், இது தொடர்பானஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அடுத்த நான்கு வார காலத்திற்குள் இது தொடர்பாகப் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும்என்றும் தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications