ராமநாதபுரம் நகர் மன்றக் கூட்டத்தில் அடிதடி, சட்டை கிழிப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் பஸ் ஸ்டாண்டு கடைகளை ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் நகர்மன்றக் கூட்டத்தில் அடிதடிகலாட்டா ஏற்பட்டது.
முறைகேடாக நடந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்களைத் தட்டிக் கேட்ட சுயேச்சை உறுப்பினரின் சட்டை கிழிந்தது. நாற்காலிகள்பறந்தன. மைக்குகள் உடைந்தன. பெண் உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி ஓட்டம் எடுத்தனர்.
சமீபத்தில் ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள கடைகள் ஏலத்துக்கு விடப்பட்டன. இந்தக் கடைகள் ரூ. 11,000 வரை ஏலம்போயின.
ஆனால், இந்தக் கடைகளை அதிமுகவினர் ரூ 2,000 மட்டுமே கட்டி ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துகடைகளை யாரும் வாடக்ைகுக்கு எடுப்பதை நகர்மன்றம் நிறுத்தி வைத்தது.
இன்று நகர் மன்றக் கூட்டம கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடைகளை ஆக்கிரமிப்பதை ஏன் நிறுத்து வைத்தீர்கள்என்று கேட்டனர்.
இதையடுத்து பிற கட்சி உறுப்பினர்கள் கடைகளை குறைந்த கட்டணத்தை செலுத்தி சில அதிமுகவினர் ஆக்கிரமிக்க முயல்வதைசுட்டிக் காட்டினர். இதையடுத்து அதிமுகவினருக்கும் பிற கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதைத் தட்டிக் கேட்ட நாகராஜன் என்ற சுயேச்சை உறுப்பினரை அதிமுகவினர் இழுத்துத் தரையில் போட்டு அடித்து உருட்டினர்.அவரது சட்டை கிழிக்கப்பட்டது. நாற்காலிகளை எடுத்து அதிமுக உறுப்பினர்கள் வீசினர். நாகராஜனுக்கு மிதியும் விழுந்தது.மைக்குகளைப் பிடிங்கி எறிந்தனர்.
இதையடுத்து பெண் உறுப்பினர்கள் உயிருக்குப் பயந்து கூட்டத்திலிருந்து வெளியே ஓடினர்.
ஒரு பெண் உறுப்பினர் நிருபர்களிடம் கூறுகையில், அவர்கள் நாகராஜனை கொன்றிருப்பார்கள். எப்படியோ அவர் தப்பிவிட்டார்.இப்பொழுதே இப்படியெல்லாம் நடக்கிறது, இன்னும் நாலே முக்கால் வருடம் எப்படி இவர்களுடன் இருந்து மன்றப் பணிகளைகவனிப்பது என்று தெரியவில்லை என்றார்.
இது பற்றி நகர் மன்றத் தலைவர் பவானி ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications