குஜராத் ஓட்டெடுப்பில் அதிமுக நடுநிலை: ஜெ அந்தர் பல்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துடன் நடைபெறவுள்ள ஓட்டெடுப்பில் அதிமுகநடுநிலை வகிக்கும் என்று என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்றுதெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:

குஜராத்தில் இன்னும் தொடர்ந் கொண்டிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் கவலை தரும் விதமாகவே உள்ளன.

இந்த வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின்கடமை. அதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

குஜராத் வன்முறை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம்நான் கூறவில்லை. ஒரு மாநில முதல்வரே மற்றொரு மாநிலத்தின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வதுசட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி சரியல்ல.

ஆனால் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று தானாகவே முன் வந்து மோடி ராஜினாமா செய்வது என்பதுவேறு விஷயம்.

அவர் ஏற்கனவே தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார். ஆனால் பாஜக தலைமை அதைஏற்கவில்லை. இது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். நான் அதில் தலையிட முடியாது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ளதீர்மானம் மீது நடக்கவிருக்கும் விவாதத்தில் அதிமுக தொடர்ந்து நடுநிலை வகிக்கும். அதை ஆதரித்தோ அல்லதுஎதிர்த்தோ வாக்களிக்காது.

விவாதங்களைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் ஓட்டெடுப்பில் அதிமுக கலந்து கொள்ளாது. நாங்கள் எந்தக்கட்சியையும் ஆதரிக்காமல் சுதந்திரமாகவே செயல்படுவோம் என்றார் ஜெயலலிதா.

சில நாட்களுக்கு முன்பு தான் இவர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.இப்போது இந்த விவகாரத்தில் பல்டி அடிக்க ஆரம்பித்துள்ளார்.

எதிர்க் கட்சிகள் கொண்டு வரும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் பா.ஜ.கவுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச உறவும்முறிந்துவிடும். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருமுறை திமுக அமைச்சர் முரசொலிமாறனுடன் பேச்சு நடத்திவிட்டார். இதனால், அந்தக் கட்சிகள் நெருங்கி வருவதாக ஜெயலலிதா நினைக்கிறார்.

காங்கிரஸ்-திமுக உறவு ஏற்பட்டால் இவருக்கு பா.ஜ.க. கூட்டணியில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஒரு தொகுதி முஸ்லீம்கள்நிறைந்த வாணியம்பாடி. இந்தத் தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.இந் நிலையில் பா.ஜ.கவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தால் வாணியம்பாடியில் மண்ணைக் கவ்வவேண்டி வரும்.

மேலும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என தமிழகத்தின் முக்கிய மடத்திலிருந்தும்ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த முக்கியஸ்தர் மூலம்ஜெயலலிதாவுடன் கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டது.

இதனால் அவர் வளைந்து கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஜெயலலிதாவின் ஆதரவுகிடைக்கும் என எதிர்க் கட்சிகள் நம்பியிருந்தன.

ஆனால், காங்கிரஸை திமுக நெருங்கி வருவதால் பா.ஜ.கவை பகைத்துக் கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+