குட்டித் தீவுகளில் நுழைய புலிகளுக்கு கடற்படை தடை
கொழும்பு:
யாழ்பாணத்தை ஒட்டியுள்ள சிறிய தீவுகளில் அரசியல் பணிகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகளுக்கு அனுமதிதர முடியாது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்தத் தீவுகள் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளாகும். ஒருவரின் பாதுகாப்புப் பகுதிகளில்இன்னொரு தரப்பினரை அனுமதிக்க வேண்டியதில்லை என்று போர் நிறுத்த ஒப்பந்திலேயே கூறப்பட்டுள்ளது.
ஊடுருவலைத் தடுக்க இந்தத் தீவுகளைச் சுற்றி கடற்படை தற்காப்பு மையங்களை அமைத்துள்ளது. இந்த முழுபகுதியுமே ராணுவ பகுதிகளாகும். அதனால் தான் புலிகளுக்கு அனுமதி தர மறுக்கிறோம்.
அதே நேரத்தில் இந்தத் தீவுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களை சந்திக்கவோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளவும் புலிகள் தாராளமாக வந்து செல்லலாம்.
ஆனால், அவர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, போர் உடை அணிந்திருக்கக் கூடாது, சயனைட் குப்பிவைத்திருக்கக் கூடாது, வயர்லெஸ் அல்லது கேமராக்களையும் கொண்டு வரக் கூடாது என்று அக் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்குப் பகுதிகளில் ஆயுதம் இல்லாத புலிகள் சிறு குழுவாக வந்து செல்லஅனுமதி தரப்பட்டுள்ளது. இநதப் பகுதிகளில் அலுவலகங்களைத் திறக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், யாழ்பாணத்தை ஒட்டியுள்ள சிறிய தீவுகளுக்குள் நுழைய புலிகளை ராணுவம் கடந்த 2 வாரங்களாகமறுத்து வருகிறது. இதற்குக் காரணம் இந்தத் தீவுகளில் கடற்படையின் தளங்களும் முகாம்களும்அமைக்கப்பட்டுள்ளது தான்.
இந்தத் தீவுகளில் புலிகளுக்கு எதிரான ஈழ மக்கள் விடுதலை முன்னணியினரை இலங்கை ராணுவம் அனுமதித்துவந்தது. இதனால் இத் தீவுகள் கிட்டத்தட்ட இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தன. இவர்கள்ஆயுதங்களுடன் திரிய அரசு அனுமதி தந்திருந்தது. கடந்த மாதம் தான் இவர்கள் ஆயுதங்களை அரசிடம்ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications