மாணவியைக் கற்பழித்த "வாத்தியார் தாத்தாவுக்கு" சிறை
திருவள்ளூர்:
10 வயது மாணவியைக் கற்பழித்த 57 வயது ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை செல்லுபடியாகும்என சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது செம்பாக்கம் கிராமம். இங்குள்ள சி.எஸ்.ஐ. பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவியை,கடந்த 1994ம் ஆண்டு பால்ராஜ் என்ற ஆசிரியர், மதிய உணவுக் கூடத்தில் வைத்து கற்பழித்து விட்டார்.
இதையடுத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு அவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் பால்ராஜுக்கு10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பால்ராஜ். அதில், தனக்கும், சிறுமியின்உறவினருக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்சினையில் தன்னைப் பழிவாங்கும் விதத்தில் இந்த பொய் வழக்குப்போடப்பட்டிருப்பதாகவும், எனவே கீழ்க் கோர்ட் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்
மேலும் சமீபத்தில் அவர் தாக்கல் செய்த இன்னொரு மனுவில், தனக்கு தற்போது 65 வயதாவதாகவும், எனவே முதிய வயதைக்கருத்தில் கொண்டு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இரு மனுக்களையும் டிஸ்மிஸ் செய்த நீதிபதி பாக்கியராஜ் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கினார். அதில், ஆசியர் பால்ராஜ்செய்துள்ள செயல் மிகவும் கொடூரமானது. அவரது வயதுக்காக கருணை காட்ட முடியாது. இந்தக் குற்றச் செயலை அவர்செய்தபோது அவருக்கு வயது 54.
சிறுமியின் தாத்தா வயதில் இருந்துள்ள பால்ராஜ் இப்படிப்பட்ட செயலை செய்ததை எப்படி மன்னிக்க முடியும்?
பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். புற்றுநோய்க்கு தந்தையை இழந்தவர் இந்த சிறுமி. அவரது தாய்எங்கோ போய் விட்டார். அவர் இருக்குமிடம் தெரியவில்லை. சிறுமியின் சித்திதான் இவரை வளர்த்து வந்தார்.
கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு அவரும் இந்தச் சிறுமியை ஒதுக்கி விட்டார். தற்போது அந்த சிறுமி அனாதையாக வாழ்ந்துவருகிறார். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில்,
கீழ் கோர்ட் பிறப்பித்துள்ள தீர்ப்பு மிகவும் சரியானதே.
அதைக் குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது. மிகவும் கொடூர புத்தி கொண்டவராக ஆசிரியர் பால்ராஜ் இருந்துள்ளார்.எனவே அவரது அப்பீல் மனு நிராகக்கப்படுகிறது. அவரது ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்படுகிறது.
உடனடியாக ஆசியர் பால்ராஜ் கைது செய்யப்பட்டு மீதள்ள தண்டனை க்காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றுஉத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி பாக்கியராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications