சென்னை: ஜவுளிக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளை
சென்னை:
சென்னையில் தொடர்கதையாகிப் போன கொள்ளைகளுக்கு முடிவே இல்லாமல் போய்விட்டது.
நேற்று சென்னை-அடையாறில் ஒரு ஜவுளிக் கடையின் ஊழியர்களைத் தாக்கி விட்டு நேற்றிரவு கொள்ளையர்கள்பணத்தை அள்ளிக் கொண்டு சென்றனர்.
அடையாறு மெயின் ரோட்டிலேயே உள்ள அந்த ஜவுளிக் கடையை நேற்றிரவு ஊழியர்கள் மூடிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஒரு கும்பல் ஜவுளிக் கடையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களையும் பயங்கரமாகத் தாக்கினர்.இதில் அவர்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றனர்.
ஊழியர்கள் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது மறுநாள் காலையில்தான் தெரிய வந்தது. அவர்கள் இருவரும்உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications