"பிரம்மோஸ்" ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பலசூர்:
இந்தியாவின் புதிய ஏவுகணையான "பிரம்மோஸ்" இன்று வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
சுமார் 290 கி.மீ. தூரத்திற்குப் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கவல்ல இந்த ஏவுகணை, இந்திய-ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவானதாகும்.
எட்டு மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணையை கப்பலிலோ, நீர்மூழ்கிக் கப்பலிலோ, முடிந்தால் போர்விமானத்தில் கூட எடுத்துச் செல்ல முடியும்.
இன்று காலை 11.05 மணிக்கு "பிரம்மோஸ்" ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு வெற்றிகரமாகப்பரிசோதிக்கப்பட்டது.
இந்தியப் பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகளும் 30 ரஷ்ய விஞ்ஞானிகளும் இந்த ஏவுகணைச் சோதனையை நேரில்பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications