ஊட்டி வருகிறார் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஓய்வெடுப்பதற்காக ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வரும் மே 8ம் தேதி ஊட்டி வருகிறார்.
இந்தக் கோடை காலத்தில் ஊட்டியில் தங்கி ஓய்வெடுக்க நாராயணன் முடிவு செய்துள்ளார்.
இதற்காக வரும் மே 8ம் தேதி அவர் ஊட்டி வருகிறார். அங்கு 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார் நாராயணன்.
குடும்பத்துடன் ஊட்டி வரும் நாராயணன், அங்குள்ள கோத்தகிரி அரசு மாளிகையில் தங்குகிறார். இதையடுத்துஅங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டியில் தங்கியிருக்கும்போது சில தனியார் நிகழ்ச்சிகளிலும் நாராயணன் பங்கேற்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications