"அம்மா" வேண்டாம்: ஜெ.
சென்னை:
"அம்மா அம்மா" என்று புகழாரம் பாடிக் கொண்டிருக்காமல் சொல்ல வந்தவற்றை சபாநாயகரைப் பார்த்துத்தெளிவாகக் கூற வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வைத்தேஉத்தரவிட்டார்.
தமிழக சட்டசபையில், சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுகஉறுப்பினர் சக்திவேல் முருகன் பேசுகையில், ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் அம்மா என்று ஆரம்பித்துபேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, உறுப்பினர் தான் சொல்ல வரும் விஷயத்தையும் கோரிக்கையையும்சபாநாயகரைப் பார்த்து நேரடியாகக் கூற வேண்டும்.
அம்மா என்று என்னிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று செல்லமாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, அம்மாவின் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிய சக்திவேல் முருகன், "அம்மா" என்றஅடைமொழி இல்லாமலேயே தனது பேச்சைத் தொடர்ந்தார்.












Click it and Unblock the Notifications