லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகச் சிக்கிய காதி வாரிய இயக்குநர்
சென்னை:
சிறு தொழில் தொடங்க விரும்பிய ஒருவரிடமிருந்து காதி கிராம தொழில் வாரியத்தின் இயக்குநர் ரூ.1,000லஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
சென்னையைச் சேர்ந்த மணி என்பவர் சிறு தொழில் தொடங்க விரும்பி காதி கிராம தொழில் வாரியத்தில்விண்ணப்பித்திருந்தார்.
இதில் கிடைக்கும் மானியத்தில் 10 சதவீதத்தைத் தனக்குத் தந்தால்தான் வங்கியில் கடன் தொகை பெறுவதற்குப்பரிந்துரைப்பேன் என்று காதி கிராம தொழில் வாரியத்தின் இயக்குநரான வெங்கட நாராயணா கூறினார்.
அதன்படி லஞ்சத்தின் அட்வான்சாக ரூ.1,000 பணத்தை வெங்கட நாராயணாவின் வீட்டில் வைத்து அவரிடம் மணிஅளித்துக் கொண்டிருந்தபோதுதான், அவருடைய வீட்டில் அதிரடியாகப் புகுந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரைக்கையும் களவுமாகப் பிடித்தனர்.
உடனடியாக வெங்கட நாராயணாவின் சென்னை வீட்டிலும் ஹைதராபாத் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வெங்கட நாராயணா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காதி வாரியத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications