இலங்கைக்கு ஜெலட்டின் குச்சிகளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு 300 ஜெலட்டின் குச்சிகளைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேரைப் போலீசார்கைது செய்தனர்.
கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த போலீசார், ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகில் சென்று கொண்டிருந்த மூன்று பேரைப் போலீசார் வழிமறித்துசோதனை செய்தனர்.
அந்த மூவரும் ஜெலட்டின் குச்சிகளைக் கடத்திக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அப்போதுதெரிய வந்தது.
இதையடுத்து அந்த மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 300 ஜெலட்டின் குச்சிகளையும்கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் குணசேகரன் மற்றும் அந்தோனி என்று தெரிய வந்தது. மற்றொருவரின்பெயர் என்னவென்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications