மதுரையில் சுவாமி வீட்டருகே இலங்கை நபர் கைது
மதுரை:
ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியைப் பார்க்க வந்ததாக கூறிய இலங்கை வாலிபரைப் போலீசார்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை-பீபீகுளத்தில் சுவாமியின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் சுவாமி வீட்டிலிருந்த போது, ஒருவர் அவ்வீட்டுவாசலிலேயே வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த போலீசார் அந்த வாலிபரைக் கூப்பிட்டு விசாரித்தனர். அந்த நபருக்கு தமிழ் தெரியவில்லை.சிறிது ஆங்கிலம் மட்டும் பேசினார். அவர் பேசிய வேறொரு மொழியும் யாருக்கும் புரியவில்லை.
ஆனால் சொந்த ஊர் இலங்கை என்று அந்நபர் கூறியவுடன் போலீஸார் உஷாராகி விட்டனர். உடனடியாகஅவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு சென்று அவரிடம் மேலும் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், தனது பெயர் கீர்த்தி கிலே ஹேமா (55) என்றும், தான் இதற்கு முன்பே இரு முறைசுவாமியிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளதாகவும், இப்போதும் பணம் கேட்கத்தான் வந்ததாகவும் கூறினார்.
இதைப் பற்றி சுவாமியிடம் கேட்டபோது, தனக்கு அந்நபரை யாரென்றே தெரியாது என்றும் என்ன நடவடிக்கைஎடுக்க வேண்டுமோ அதை எடுங்கள் என்றும் போலீசாரிடம் கூறிவிட்டார்.
பிடிபட்டவர் கொடுத்த சென்னை முகவரி, சென்னை போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசார்இவர் பற்றி கொடுக்கும் தகவலையடுத்தே மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று மதுரை போலீசார்தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவர வேண்டும்என்றும் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டிக்க வேண்டும் என்றும் சுவாமி தினந்தோறும் கூறி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications