ஜெவை சந்திக்க முடியாத குடும்பம் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துமனு கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைவோர் தற்கொலை செய்து கொள்ள முயல்வது அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை கோட்டை வளாகத்தில் சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த ஒரு கணவரும், மனைவியும்ஜெயலலிதாவை சந்திக்க முடியாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தையேபரபரப்பில் ஆழ்த்தியது. அவர்களது மகளுக்கு அரசு வேலை கொடுக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.

இதையடுத்து கோட்டை வளாகத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக வருவோர் அதிகரித்து விட்டனர். கையில்விஷ பாட்டிலை வைத்துக் கொண்டு அலையும் அவர்கள் தங்களை உள்ளே விடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று போலீசாரையே மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் காவல்துறையினர் மிகவும் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. இந் நிலையின் மீண்டும் ஒரு தற்கொலைமுயற்சி இன்று நடந்தது. இதன் விவரம்:

திருப்பூர் அண்ணாநகரைச் சேர்ந்த வைரமுத்து. இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்தார். சிலவருடங்களுக்கு முன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர முயற்சித்து வந்தார், ஆனால்நடக்கவில்லை.

இதையடுத்து தனது மனைவி தனலட்சுமி, மகன் விக்னேஷ், மகள் சுகன்யா ஆகியோருடன் சென்னைக்கு வந்தார்.கையில் மண்ணெண்ணை கேனுடன் வந்த அவர் கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து குடும்பத்துடன் தீக்குளிக்கமுயன்றார்.

இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார் உடனடியாக பாய்ந்து சென்று அந்த முயற்சியைத் தடுத்தனர். பின்னர் 4பேரும் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+