"கண்ணகி வழிபாட்டுக்கு தடை நீடித்தால் வழக்கு"
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கண்ணகி வழிபாட்டுக்கு விதித்த தடைக்கு தமிழ் சான்றோர் பேரவை கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
கண்ணகி வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை நீடித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும்அப்பேரவை கூறியுள்ளது.
திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் கற்பின் தெய்வமாக மதிக்கப்படும் கண்ணகிக்கு கோயில் எழுப்ப திட்டமிட்டு,தமிழ் சான்றோர் பேரவை நடுக்கல் நாட்டினர். ஆனால் இதற்கு அனுமதி மறுத்து அந்த நடுக்கல்லை போலீசார்அகற்றி விட்டனர்.
இந்நிலையில் சித்ரா பெளர்ணமி அன்று கண்ணகி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திருநெல்வேலிமாநகராட்சியிடம் தமிழ் சான்றோர் பேரவை கோரி இருந்தது.
ஆனால் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் வழிபாடு நடத்த அனுமதி தரமுடியாதுஎன்று மாநகராட்சி நிர்வாகம் பதிலளித்தது. இதைத் தொடர்ந்து அவ்விடத்தில் வழிபாடு நடத்தவும் போலீசார் தடைவிதித்து விட்டனர்.
மாநகராட்சியின் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்த தமிழ் சான்றோர் பேரவை, கண்ணகி வழிபாடு நடத்தஅனுமதி கோரி மாவட்ட, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் நிலையங்களிடம் விண்ணப்பிக்கும்என்றும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் கூறியுள்ளது.
தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளரான வியனரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications