பன்னீர்செல்வம் சொல்வது முழுப் பொய்: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றிவிட்டதாக பொதுப் பணித்துறை அமைச்சர்பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதை திமுக தலைவர் கருணாநிதி மிகக் கடுமையாக மறுத்துள்ளார்.
பன்னீர் குற்றச்சாட்டு:
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ஹோமாவதி அணையைக் கட்ட முடிவு செய்தபோது அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி அந்தத் திடத்தத்தில் இருந்த குறைபாடுகளையும், இதனால் தமிழகவிவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி கவலையே படவில்லை. இதில் தமிழகத்துக்கு எந்தஆட்சேபணையும் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் தமிழக விவசாயிகளுக்கும் பெரும் துரோகம்விளைவித்துவிட்டார் என்று பன்னீர் சட்டசபையில் கூறினார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுந்து நின்று தர்ணா செய்தனர். உடனேஅவர்கள் சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.
கருணாநிதி எதிர்ப்பு:
பன்னீரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிகத் தவறான குற்றச்சாட்டுகளை பன்னீர் முன் வைத்துள்ளார். சட்டசபையில் அராஜகமான பெரும்பான்மைஇருக்கிறது என்ற காரணத்துக்காக எதிர்க் கட்சிகளைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசுவதை ஜனநாயகம்தெரிந்தவர்கள் ஏற்க மாட்டார்கள்.
பன்னீரும் ஜெயலலிதாவும் கூறுவது போல 1968ம் ஆண்டில் ஹேமாவதி அணைக்கட்டு கட்டப்படவில்லை.அதற்கும் முன்னதாக அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோதே அணைக் கட்டும் பணி ஆரம்பித்துவிட்டது.
நான் 1971ல் முதல்வராக இருந்தபோது கர்நாடகத்தில் உள்ள ஹேமாவதி, கபினி, ஹாரங்கி, சொர்னாவதிஆறுகளின் குறுக்கே அணை கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் வரத்தைத் தடுப்பதை எதிர்த்து சட்டமன்ற்ததில் தீர்மானம்கொண்டு வந்தேன்.
மத்திய அரசின் தடைகளையும் மீறி அணையைக் கட்டியது கர்நாடகம். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு திமுகமீதும் என் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அமைச்சர்பன்னீர் செல்வமும்.
இதே போலத் தான் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பினாமி தான் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனஇயக்குனர் சீனிவாசன் என்று ஜெயலலிதாவும் அமைச்சர் பொன்னையனும் சட்டமன்றத்தில் பொய்க் குற்றம்சாட்டினார்கள்.
இதை நிரூபிக்கத் தயாரா என்று மாறன் கேள்வி கேட்ட பிறகு இருவருமே அமைதியாகிவிட்டனர். உண்மைஇருந்தால் பேச வேண்டியது தானே என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications