ஜெயாவை சந்திக்கிறார் மதுரை திமுக மேயர்
சென்னை:
மதுரை மாநகராட்சி மேயர் செ. ராமச்சந்திரன் வரும் 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மதுரை மாநகரவளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசுகிறார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவரை திமுக தரப்பிலிருந்து உயர் பதவி வகிக்கும் ஒருவர்இப்போதுதான் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை என்றுஏற்கனவேஜெயலலிதாவும், அதிமுகவினரும் குறை கூறியுள்ளனர்.
ஆனால், தான் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியதாகவும், முதல்வர் தரப்பிலிருந்துதான் இன்னும் அனுமதிகிடைக்கவில்லை என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதற்கிடையே ஸ்டாலின் எம்.எல்.ஏவாகவும் இருப்பதால், அவருடைய மேயர் பதவியைக் காலி செய்யும் "ஒருநபர், ஒரு பதவி" என்ற சட்ட மசோதாவை தமிழக அரசு சமீபத்தில்தான் தாக்கல் செய்தது.
இந்நிலையில் மதுரை மேயர் ராமச்சந்திரன் கடந்த மாதம் 23ம் தேதி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். மதுரைமாநகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்குரிய நிதியை விரைவாக ஒதுக்க வேண்டும் என்றும், இதற்காகமுதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டு என்றும் அவர் அக்கடிதத்தில் கோரியிருந்தார்.
இந்தக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு, மதுரை மேயர் தலைமையிலான குழு வரும் 14ம் தேதி ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் காலை 7 மணிக்கு சந்திக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமச்சந்திரன் தலைமையில், துணை மேயர், மாநகராட்சி அனைத்துக் கட்சித் தலைவர்கள், மண்டலதலைவர்கள், மதுரையிலுள்ள 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 2 எம்.பிக்கள் ஆகியோர்அடங்கிய குழு வரும் 14ம் தேதி ஜெயலலிதாவைச் சந்திக்கவுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications