எதிர்க் கட்சிகளின் தீர்மானம் தோற்றது
டெல்லி:
குஜராத் பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் 94 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பிற்கு முதலில் எட்டு மணி நேரம்தான் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது 16மணி நேரம் நீடித்தது. இன்று காலை 4.30 மணிக்குத் தான் ஓட்டெடுப்பே நடந்தது.
குஜராத் அரசையும் மத்திய அரசையும் தாக்கி எதிர்க் கட்சி எம்.பிக்கள் பேசிக் கொண்டே போக, அதை ஆளும்தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களும் தலைவர்களும் மறுத்துப் பேசவே, விவாதம் நீடித்துக் கொண்டேபோனது.
இதையடுத்து நேற்று இரவு 8 அல்லது 9 மணியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய விவாதம், இன்று காலை 4மணிக்குத்தான் முடிவடைந்தது.
அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் பிரதமர் வாஜ்பாய் விவாதத்திற்குப் பதிலளித்து உணர்ச்சிப் பிழம்புடன்பேசினார்.
ஓட்டெடுப்பு குறித்து கடைசி நேரத்தில்தான் எங்கள் முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்த தெலுங்கு தேசம்கட்சி எம்.பிக்கள், யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளிநடப்பு செய்து விட்டனர்.
அதன் பிறகு இன்று காலை சுமார் 4.25 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெற்றது.
ஓட்டெடுப்பில் எதிர்க் கட்சிகளின் தீர்மானத்துக்கு ஆதரவாக 182 ஓட்டுக்களும் எதிராக 276 ஓட்டுக்களும்கிடைத்தன. இதையடுத்து 94 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு தீர்மானத்தைத் தோற்கடித்தது.
ஆனால், இந்த ஓட்டெடுப்பின்போது தான் தேசிய ஜனநாயகக் முன்னணியில் எவ்வளவு குழப்பங்கள் நிலவுகின்றனஎன்பது வெளியில் தெரிந்தது.
கூட்டணியை ஆதரித்து வரும் தெலுங்கு தேசம் நடுநிலை வகிக்கும் என்று தான் வாஜ்பாய் எதிர்பார்த்தார். ஆனால்,வெளிநடப்பு செய்ததன் மூலம் மத்திய அரசை கடுமையாக எதிர்ப்பதை அக் கட்சி வெளிப்படுத்திவிட்டது.
தேசிய மாநாடு கட்சியும் வெளிநடப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் தனது அமைச்சர் ஒமர் பரூக்கை ராஜினாமாசெய்யவும் வைத்துவிட்டது. அவரது ராஜினாமா விவகாரத்தில் வாஜ்பாய் இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசை ஆதரிக்கும் என அக் கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூறியிருந்தார். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள் அவைக்கு வராமல் புறக்கணித்துவிட்டனர்.
ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி கூட்டணியை விட்டு வெளியே போனது மட்டுமல்லாமல், அரசை எதிர்த்தேவாக்களித்துவிட்டது.
இதனால் இத் தீர்மானத்தில் அரசு வென்றிருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவுகள் ஏற்படஆரம்பித்துவிட்டன. இனி வரும் காலங்களில் இந்த அரசு மேலும் நெருக்குதல்களை சந்திக்கலாம் என அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications