தெலுங்கு தேசம் எம்.பிக்கள் வெளிநடப்பு
டெல்லி:
ஓட்டெடுப்பு குறித்து தங்களுடைய முடிவை கடைசி நேரத்தில் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்த தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்கள், யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளிநடப்பு செய்தனர்.
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் லோக்சபாவில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று பகல்சுமார் 12 மணிக்குத் தொடங்கிய விவாதம், 16 மணி நேரங்களுக்கு நீடித்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதத்தின் முடிவில் ஓட்டளிப்பது குறித்து தங்கள் முடிவை கடைசிநேரத்தில்தான் அறிவிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சி கூறியிருந்தது.
விவாதத்தின்போது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலகியே தீர வேண்டும் என்று எதிர்க் கட்சிஎம்.பிக்களுடன் சேர்ந்து கொண்டு தெலுங்கு தேசம் எம்.பிக்கள் ஆவேசமாகவே பேசினர்.
ஆனாலும் ஓட்டெடுப்பு குறித்து கடைசி வரை அவர்கள் வாயே திறக்காமல் இருந்து விட்டனர்.
இந்நிலையில் ஓட்டெடுப்புக்கு சற்று முன் திடீரென்று எழுந்த தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் எர்ரன் நாயுடு,பிரதமர் வாஜ்பாயின் பதிலுரையில் தங்களுடைய கோரிக்கைகள் பற்றி எதுவும் கூறாததால் அதைக் கண்டித்துநாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அவையை விட்டு வெளியேறினார்.
அவருக்குப் பின் தெலுங்கு தேசக் கட்சியின் மற்ற 27 எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
நாயுடு பேட்டி:
இந் நிலையில் இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய தெலுஙகு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு,
பிரதமர் வாஜ்பாயின் பதிலுரையில் திருப்தி இல்லாததால் தான் எங்கள் எம்.பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.தொடர்ந்து மோடியை நீக்கக் கோரி பா.ஜ.க. அரசுக்கு நெருக்குதல் தருவோம். எங்கள் நிலையில் எந்த மாற்றமும்இல்லை.
மதவாதத்தையும், மதத்தின் பெயரால் ஒரு அரசே வன்முறையைத் தூண்டிவிட்டு வருவதையும் பார்த்துக் கொண்டுசும்மா இருக்க என்னால் முடியாது என்றார் காட்டமாக.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications