Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை: புலிகளின் படகு வெடித்துச் சிதறியது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் படகு ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படகை இலங்கை கடற்படை தகர்த்து விட்டதா அல்லது தானாகவே வெடித்துச் சிதறியதா என்றுதெரியவில்லை.

யாழ்ப்பாணம் அருகே நடுக்கடலில் கடற்புலிகளோடு சென்று கொண்டிருந்த இந்தப் படகு திடீரென்று வெடித்துச்சிதறியதை இலங்கை ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று அந்தப் படகை நோக்கி வேகமாகச் சென்றதாகவும் அப்போதுகடற்புலிகளின் அந்தப் படகு வெடித்துச் சிதறியதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஆனால் கடற்படைக் கப்பலே அந்தப் படகைத் தகர்த்ததா அல்லது அது தானாகவே வெடித்துச் சிதறியதா என்பதுகுறித்து ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

புலிகளிடமிருந்தும் இதுவரை இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கடந்த வாரம்தான் திரிகோணமலை அருகே புலிகளின் மூன்று படகுகளைக் கைப்பற்றிய இலங்கைக்கடற்படையினர், 40 கடற்புலிகளையும் கைது செய்து பின்னர் விடுவித்து விட்டனர்.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, விரைவில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இனப்பிரச்சனைக்கான அமைதிப் பேச்சு நடைபெறவுள்ள சூழ்நிலையில் இந்தச் சம்பவங்கள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவங்களால் அமைதிப் பேச்சுவார்த்தை தடைபடுமோ என்ற அச்சமும் எழ ஆரம்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+