கருணாநிதிக்கு பாதுகாப்பு தராமல் அலட்சியப்படுத்திய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கே.கே. நகரில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு போலீசார்போதிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக நடந்து கொண்டனர்.

மே தினத்தையொட்டி திமுகவின் தொழிலாளர் பிரிவான தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் கே.கே.நகரில் பொதுக் கூட்டம் நடந்தது.

செ.குப்புசாமி எம்.பி தலைமயில் நடந்த இந் நிகழ்ச்சிக்கு போலீசாரிடம் உரிய அனுமதியையும் திமுகவாங்கியிருந்தது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியும் கலந்து கொண்டார்.

ஆயிரக்கணக்கான பொது மக்களும் திமுகவினரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கே.கே. நகர் காவல்நிலையத்தில் இருந்து வெறும் லத்திகளுடன் சில போலீசார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததைக் கண்ட திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் உடனேகருணாநிதியைத் தொடர்பு கொண்டர். உடனே, ஸ்டாலின் தலையிட்டு திமுக இளைஞர் அணியினர் மூலம்பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தார்.

என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட தமிழகத்தின் மிக முக்கிய தலைவரான கருணாநிதிக்குபாதுகாப்பு வழங்காமல் அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பது நாகரீகமானதாகத் தெரியவில்லை.

அரசுக்கு கைகட்டி கும்பிடு போடும் போலீசார் அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன பதில் சொல்லிஇருப்பார்கள் என்று தெரியவில்லை.

போலீசாரின் இந்த அலட்சியத்தை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுமான் கான் மிகக் கடுமையாகவிமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீசாரின் உரிய அனுமதியை வாங்கிக் கொண்டுநடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு தராமல் மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொண்டுள்ளனர். இதை மிகவன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+