எல்லையில் இறந்த நெல்லை ராணுவ வீரருக்கு ஜெ. புகழாரம்
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், எல்லையில் வீரமரணம் அடைந்ததையொட்டி அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
வீரர் பாலகிருஷ்ணன், நாட்டுக்காக தனது இன்னுயிரை நீத்துள்ளது பெருமையைத் தருகிறது. அதே வேளையில்அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்கிரமசிங்கபுரம் கொண்டு வரப்படும் பாலகிருஷ்ணனின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் தகனம்செய்யப்படும்.
அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அரசு சார்பில்மரியாதை செலுத்துவர்.
பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல்,அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநில அரசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications